GuidePedia

அர்ஜுனா விருதுக்கு எனது பெயரை பரிந்துரைக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் அர்ஜுனா விருதுக்கு இந்த முறை ரோகித் சர்மா பெயரை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறியதாவது, அர்ஜுனா விருதுக்கு எனது பெயரை பரிந்துரைப்பது என பிசிசிஐ எடுத்த முடிவால் நான் கவரவிக்கப்பட்டதாக உணர்கிறேன்.
அர்ஜுனா விருது தொடர்பான தகவலை கேட்டபோது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும் மும்பை அணிகுறித்து கூறியதாவது, எங்கள் அணியின் செயல்பாடு இதுவரை திருப்திகரமாக இல்லாவிட்டாலும், சன்ரைஸர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் இனிவரும் போட்டிகளில் வெற்றியைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை வீரர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி கண்டிருப்பது போதுமானதல்ல என்பது எனக்கு தெரியும். கடந்த சீசனிலும் நாங்கள் இதே நிலையில்தான் இருந்தோம்.
ஆனால் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினோம். எனினும் ஒவ்வொரு முறையும் கடந்த ஆண்டு நடந்ததைப் போன்று நடக்கும் என சொல்லமுடியாது என கூறியுள்ளார்.



 
Top