GuidePedia

வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கடற்படையின் சில உயரதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசேட காவற்துறை குழுவொன்று இரகசியமான முறையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமன்றி சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது அவர் கூறியுள்ளார்.
வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய தயக்கம் காட்டப்போவதில்லையென தெரிவித்துள்ள அவர், சில இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த வெள்ளைவான் கும்பலினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



 
Top