GuidePedia


அரச சொத்துக்களை மீள கையகப்படுத்தும் ஜனாதிபதி விசேட செயலணிக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

13 பேர் குறித்த விசேட செயலணியில் உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (30) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. 

ஜனாதிபதி விசேட செயலணியில் பிம்பா திலகரட்ன, ரி.முதலிகே, எச்.அமரதுங்க, எம்.விஜேரத்ன, டி.அரந்தர, எஸ்.பதிநாயக்க, தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, கல்யாணி தஸநாயக்க, ஜகத் பீ.விஆஜேவீர, என்.ஜயவர்த்தன, ஏ.பிரேமசாந்த, ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கொடாகொட மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன ஆகியோர் உள்ளனர். 

கடந்த அரசாங்க காலத்தில் காணாமல் போன அரச சொத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றை மீளப் பெறும் பணி இந்த ஜனாதிபதி விசேட செயலணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 



 
Top