(க.கிஷாந்தன்)
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிபக்கலை தோட்டப்பகுதியில் உள்ள ஆற்றில் 4 வயதுடைய சிறுமி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் லிந்துலை மெக்பேப் தோட்டத்தை சேர்ந்த தியாகராஜா யாலினி என தெரியவந்துள்ளது.
இவருடைய தந்தை கொழும்பில் தொழில் செய்து வருவதால் இவருடைய மனைவி பிள்ளையும் தனது உறவினர் வசிக்கும் லிபக்கலை தோட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
அம்மா உட்பட உறவினர்கள் தொழிலுக்கு சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் முன் உள்ள ஆற்றுக்கு இவருடைய அக்காவுடன் உடுதுணி கழுவ சென்ற போது தவறி ஆற்றில் விழுந்துள்ளார்.
இதன்பின் பிரதேச மக்களுக்கு கிடைத்த தகவலையடுத்து சிறுமியை காப்பாற்ற முயற்சி செய்த போதிலும் முயற்சி பயனளிக்கவில்லை.
விழுந்த இடத்திலிருந்து சுமார் 100 அடி தொலைவில் இருந்து அச்சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.