GuidePedia

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணித்தலைவர் வார்னருடன் மோதலில் ஈடுபட்ட மும்பை பந்துவீச்சாளர் மாலிங்கவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சில் மிரட்டிய மாலிங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் வெற்றிக்கு உதவினார். ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இந்தப் போட்டியில் ஐதராபாத் அணித்தலைவர் வார்னரை ஆட்டமிழக்க செய்த போது, மாலிங்க அவரிடம் சில வார்த்தைகளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக போட்டி நடுவர் ரோசான மகானாமா ஆய்வு செய்ததில், மாலிங்க வீரர்கள் நடத்தை விதிமுறையை (லெவல் 1) மீறி இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மும்பை வீரர் மாலிங்கவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.



 
Top