GuidePedia

பழங்களில் சுவையான பழமான பப்பாளியில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது.
இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன.
பப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால் செரிமானம் எளிதில் நடைபெற்று மலச்சிக்கலும் குணமாகிறது.
பப்பாளியில் உடலில் ஏற்படும் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால் பப்பாளியை சாப்பிடுகின்றனர்.
கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாளி இலை கஷாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது.
அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாளி இலை கஷாயம் சிறந்த பலனளிக்கும்.
பப்பாளி இலை கஷாயம் நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது.
இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றி பழுத்த பப்பாளிப் பழம் மிகச் சிறந்த உணவாகும்.
காலை உணவாக பப்பாளிப் பழத்தை மட்டுமே சாப்பிடலாம். மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடலாம். ஆனால் இரவில் பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது.



 
Top