GuidePedia


நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக இதுவரை கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என நேபாளத்துக்கான இலங்கை தூதுவராலயம் தெரிவித்துள்ளது. 

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக 400 பேர் வரை பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. 

இதன் பாதிப்பு இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டன. 

நேபாளத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்காரா டவர் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. பல வீடுகளின் சுவர்கள் விரிசல் அடைந்து இடியும் நிலையில் உள்ளன. மேலும் தர்காரா டவர் இடிபாடுகளில் பலர் சிக்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

பின்னிணைப்பு 

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 688 பேர் உயிரிழந்திருக்கலாம் என்பதோடு பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.



 
Top