GuidePedia

(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியில் போகவத்தையிலிருந்து மவுண்ட்வேர்ணன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று திம்புள்ள கோவிலுக்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்ததோடு மேலும் மூவா் படுங்காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவ்விபத்து 25.04.2015 அன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனா்.

வாகன சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனா்.

விபத்தில் உயிரிழந்தவா் மவுண்ட்வோ்ணன் பகுதியை சேர்ந்த சிவமாயம் விமலன் வயது 28 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.








 
Top