GuidePedia

அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சி இன்று 8 புதிய திருத்த யோசனைகளை முன்வைத்துள்ளது.
இந்த திருத்த யோசனைகளை கவனத்தில் எடுத்து கொள்ளுமாறு எதிர்க்கட்சி இன்று மாலை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ளும் வாசகங்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் இந்த 8 யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்தார்.
அதேவேளை நாடாளுமன்றத்தில் இன்று மதியமும் மாலை இரண்டு முறை கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
மதியம் நடைபெற்ற கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. எதிர்க்கட்சி முன்வைத்த யோசனை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இது சம்பந்தமாக 6 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.



 
Top