GuidePedia

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக லலித் வீரதுங்க கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் கடமையாற்றியிருந்தார்.
நிறுவனத்தில் இடம்பெற்ற 620 மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் லலித் வீரதுங்க கைது செய்யப்படவுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
நிறுவனத்திற்கு சொந்தமான பணத்தைப் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் நிதியைக் கொண்டு பௌத்தர்கள் அணியும் சில் ஆடைகள் பெருமளவு கொள்வனவு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடி தொடர்பில் லலித் வீரதுங்க இந்த வாரத்தில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லலித் வீரதுங்கவுடன், நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்த அனுஸ பெல்பிட்டவும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
19ம் திருத்தச் சட்டம் குறித்த வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
அதன் பின்னர் லலித் வீரதுங்க அநேகமாக கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.



 
Top