அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலம் மீது மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்துவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஒருமணிநேரம் ஒத்திவைக்கப்பட்டு கட்சித்தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் அவை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் மாலை 18.58க்கு கூடியது. பின்னர்,
பெயர் கூப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 215 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
எதிராக ஒருவரும் , ஏழு பேர் சமூகமளிக்காமலும் , ஒருவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாமலும் இந்த வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது.