GuidePedia

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது யாப்பா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு 25ம் திகதி நடத்தப்படவிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி நுவரெலியா சென்றுவிட்டார், தற்போதைய ஜனாதிபதி கட்சிக் கூட்டங்கள் சிலவற்றில் பங்கேற்றிருந்தார்.
மஹிந்த மைத்திரி ஒன்றிணைவதனை எவரும் விரும்பாமலில்லை. சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர்.
மஹிந்த தரப்பைச் சேர்ந்தவர்கள் ஒத்துழைப்பு அவசியம், அவசியமில்லை என்பதல்ல பிரச்சினை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனநாயக குணங்களை வெளிப்படுத்திய கட்சியொன்றாகும்.
1977ம் ஆண்டு ஒற்றுமையின்மை காரணமாகவே தாம் தோல்வியைத் தழுவினோம்.
இடதுசாரி கட்சிகள் விலகிச் சென்ற காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தி நன்மை அடைய சிலர் முயற்சிக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.



 
Top