GuidePedia


இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாது என 19வது திருத்தச் சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளதென வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். 

இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டில் பிரஜாவுரிமை பெறும்போது இலங்கை பிரஜாவுரிமை தானாகவே இல்லாது போகும் என அவர் சுட்டிக்காட்டினார். 

இந்நிலையில் இன்று (30) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அரசியல் யாப்புக்குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, பொதுத் தேர்தலில் போட்டியிட இலங்கை பிரஜாவுரிமை அவசியம் என குறிப்பிட்டார். 

இதேவேளை, பசில் ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் நீண்ட காலம் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் என்.எம்.ரணசிங்க தெரிவித்தார். 



 
Top