நேபாளத்தில் இன்றைய தினம் மீண்டும் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தின் கோதாரியில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இன்றைய தினம் மீண்டும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேபாளத்தில் இன்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கமானது வட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. பீஹார், ஜார்கண்ட், அசாம், மேற்கு வங்கம் மற்றும் புது டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேபாளத்தின் அயல் மாநிலமான மேற்கு வங்க மாநிலத்தில் நிலநடுக்கத்தின் பாதிப்பு அதிகமாக உணரப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, எவரெஸ்ட் மலைத்தொடரில் மேலும் பல பனிச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இன்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.