GuidePedia

பொதுத் தேர்தலில் ஐ.ம.சு. கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறுத்தப்படாவிட்டால், அவர் வேறு கட்சியில் நிச்சயம் போட்டியிடுவார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க பெரும் எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு மஹிந்தவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மஹிந்தவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த தலைமையில் போட்டியிடும் விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காமினி லொக்குகே சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.



 
Top