19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் கடும் முயற்சிகளை மேற்கொண்டவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அன்றி வேறு எவருமில்லை என நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க தயாரானது மிகவும் பாராட்டுக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாதுளுவாவே சோபித தேரர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் மாத்திரமல்லாது, ஜே.வி.பியினர் வழங்கிய ஒத்துழைப்புகளை மிகவும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
அதேபோல் இந்த செயற்பாடு முழுமையடைய வேண்டுமாயின் 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவது கட்டாயமானது.
தற்போதைய ஜனாதிபதியின் ஊடாகவே அதனை நிறைவேற்ற முடியும். வேறு ஒருவர் மூலமாக அதனை நிறைவேற்ற முடியும் என நினைப்பது முட்டாள்தனமானது. கல்லு சூடாக இருக்கும் போதே ரொட்டியை சுட வேண்டும் எனவும் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.