GuidePedia

(க.கிஷாந்தன்)

கொட்டகலை நகரில் இடம்பெற்ற விபத்தில் 10 வயதுடைய இரு மாணவிகள் படுங்காயமடைந்துள்ளார்.

கொட்டகலை
 நகரில் சதோச கடைக்கு முன்பாக உள்ள வீதிக் கடவையில் சென்று கொண்டிருந்த குறித்த இரு மாணவிகள் மீதும் லொறி ஒன்று மோதியதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் படுகாயமடைந்த இரு மாணவிகளும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படுங்காயமடைந்த இரு மாணவிகளும் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தகரமலை தோட்டத்தை சேர்ந்தவா்கள் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து  27.04.2015 அன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனா்.

அட்டன்
 பகுதியிலிருந்து தலவாக்கலையை நோக்கி சென்ற லொறியே இவ்வாறு குறித்த மாணவிகள் மீது மோதியுள்ளது.

விபத்தை அடுத்து சந்தேக நபரான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.



 
Top