GuidePedia

(இக்பால் அலி)
நில நடுக்கத்தால் பெறும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள நேபாளம் நாட்டிற்கு உதவி செய்யும் முகமாக இலங்கையில் உள்ள முஸ்லிம சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ‘ஹெல்பிங் நேபால் – ஸ்ரீலங்கன் முஸ்லிம் போரம்’ என்ற பெயரில் அமைப்புகளுக்கிடையிலான வலையமைப்பொன்றை உருவாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷ்ஷெய்க் எம். ஜே. இம்ரான் தெரிவித்தார்.
நேபாளம் நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கையிலுள்ள இஸலாமிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து நிவாரண நடவடிக்கை மேற்கொள்வதற்காக சபாப் நிறுவனத்தில் விசேட கூட்டம் 29-04-2015 நடைபெற்றது. அதன்போது கலந்து கொண்ட சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷ்ஷெய்க் எம். ஜே. இம்ரான் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
மனிதாபிமான உதவித்திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துதல், இயற்கை அணர்த்தங்களின்போது முஸ்லிமக்ள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றதொரு முன்மாதிரியை காட்டுதல், சமூக அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைந்த செயற்பாட்டை ஊக்குவித்தலும் உறுதிப்படுத்தலும் போன்ற சில குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வலையமைப்பு ஆரம்பிக்கப்ட்டுள்ளது.
இந்த வலையமைப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா , முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா , ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமி , இலங்கைக்கான சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு , Serendip Foundation for Relief and Development (SFRD), நெஷனல் ஷூறா கவுன்சில் , ஷபாப் நிறுவனம் , ஜமாஅதுஸ் ஸலாமா,Muslim Foundation for Culture Development (MFCD)> , கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் , தெஹிவலை முஸ்லிம் பள்ளிவாயல்கள் சம்மேலனம் , அகில இலங்கை ymma பேரவை , Caring hands நிறுவனம், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் , Muslim Aid of Sri Lanka , அல் முஸ்லிமாத், அகில இலங்கை முஸ்லிம மீடியா போரம் , ஆகிய தேசிய அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிவாரண நிகழ்ச்சித்திட்டத்தில் முதற்கட்டமாக Helping Nepal – Sri Lnka Muslim Forum  இலங்கைவாழ் முஸ்லிம் மக்கள் நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் முகமாக பின்வரும் பொருற்களையோ அல்லது பண உதவியையோ தந்துதவுமாறு தயவாய் வேண்டிக் கொள்கிறது.
தேவைப்படும் அத்தியாவசியப் பொருற்கள்:
 New Blankets  (புதிய போர்வைகள்)
  (கூடாரங்கள்)
  (முதலுதவிப் பொருற்கள்)
 Hygienic Kits (for new born babies and infants)
 Sanitary Pads and Diapers (for babies and ladies)
உணவுப் பொருற்கள்
  (பால் வகை உணவுகள்)
  (அரிசி)
  (பருப்பு)
 டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள்
 நீர் கொள்கலன்கள்)

 மருத்துவப் பொருற்கள் அவசரமாக தேவைப்படுகின்றன
பின்வரும் இடங்களில் உங்களது உதவிகளை வழங்கலாம்:
• அக்பர் மஸ்ஜித் – ளுடயஎந ளைடயனெ
• வாழைத் தோட்டம் மஸ்ஜித் – Pநவவயா
• கொலன்னாவ ஜும்ஆ மஸ்ஜித் – மழடழnயெறய
• மினன் பள்ளிவாயல் – னுநஅயவயபழனய
• கலந்தர் சாஹிப் மஸ்ஜித் – ஆயசயனயயெ
• கொள்ளுபிட்டி ஜும்ஆ மஸ்ஜித் – மழடடிவைல
• தெஹிவளை ஜும்ஆ மஸ்ஜித் – னுநாறையடய

இதுவரையில்………………………..
5000 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்….
காயமடைந்தோரின் தொகை 10,000 யும் தாண்டிச் சென்று கொண்டுள்ளது……..
28 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ள அதே நேரம் 70,000 விடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன………
42 லடசம் பேர் குடிநீர் இன்றி தவிக்கின்றனர்……..
35 லட்சம் பேர் உண்ண உணவின்றி வாடுகின்றனர்…..
10 லட்சம் சிறுவர் சிறுமிகள் பல வகையிலும் பாதிக்கப்ட்டுள்ளனர்….

நேபாள மக்களுக்கு நீங்களும் உதவிடலாம்…. உங்கள் பிராந்திய பள்ளிவாயல் சம்மேளனத்தை தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்கிடுங்கள்.
மேலதிக தகவல்களுக்கு:
சகோ. அஷ்கர் கான் – 0777 572 935
சகோ. ஜம்ஸித் – 0777 394 208
Hotline: 0727 889 966



 
Top