(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட காத்தான்குடி-06 அமானுல்லாஹ் முதலாம் குறுக்கு வீதி 30-04-2015 இன்று வியாழக்கிழமை பாத்திமா பள்ளிவாயல் வீதி என்று பெயர் சூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது காத்தான்குடி பாத்திமா பள்ளிவாயல் வீதிக்கான புதிய பெயர் பலகையை காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
மேற்படி நிகழ்வில் பாத்திமா பள்ளிவாயல் தலைவர் ஏ.எல்.எம்.இப்றாஹீம்,அதன் செயலாளர் ஏ.எல்.எம்.சித்தீக்,அதன் உப தலைவர் ஏ.எம்.கே.முஹம்மட் (ஏ.எச்.) உட்பட பாத்திமா பள்ளிவாயல் நிருவாகிகள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த பாத்திமா பள்ளிவாயல் வீதியில் பாத்திமா பள்ளிவாயல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.