GuidePedia

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். திமுகவின் அன்பழகன் தரப்பு மற்றும் கர்நாடக அரசு தரப்பிற்கு எழுத்துப்பூர்வ வாதத்தை தயார் செய்து சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வ வாதத்தை தயார் செய்து சமர்பித்துள்ளார்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில்,  அரசு வழக்கறிஞராக செயல்பட்ட பவானிசிங் நியமனம் செல்லாது என்பதால் அவரது வாதத்தை கவனத்தில் எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியா கர்நாடக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,  இன்று மாலை 4 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பு வாதத்தை பி.வி.ஆச்சாரியா தாக்கல் செய்தார். எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்த ஆச்சார்யா,  சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் , சாட்சிகள் மற்றும் ஆதாரப்பூர்வமாக குற்றம் நிரூபிக்ககப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.



 
Top