GuidePedia

19ம் திருத்தச் சட்டத்தில் 37 திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுக்கவுள்ளது.
19ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதம் இன்றும் நாளையும் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.
திருத்தச் சட்டத்தில் 37 திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென கோருவதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டமொன்று நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானங்கள் இன்று பகல் 12.00 மணிக்கு முன்னதாக நாடாளுமன்ற செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அதன் பின்னர் கட்சித் தலைவர் கூட்டமொன்றை கோரி அதில், திருத்தங்கள் பற்றி பேசப்படவுள்ளது.
19ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதம் நடத்தப்படும் இன்றும், நாளையும் தாமும் நாடாளுமன்றிற்கு பிரசன்னமாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.



 
Top