(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வ10ட் பிரதேசத்தில் இருந்து பசு மாடு இரண்டையும் கன்று குட்டி ஒன்றையும் இறைச்சிக்காக அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பசுமலை
பிரதேசம் வரை லொறி ஒன்றில் கொண்டு செல்லும் போது அட்டன் டயகம பிரதான வீதியில் போடைஸ் பகுதியில் வைத்து 26.04.2015 அன்று காலை 5 மணியளவில் அட்டன்
பொலிஸாரால் குறித்த லொறியை மறித்து விசாரணைக்குட்படுத்தும் போது அனுமதி பத்திரம் இல்லாமல் மாட்டை கொண்டு செல்வதாக தெரியவந்துள்ளது.
அதன் பின் மாட்டை கொண்டு சென்ற 2 சந்தேக நபர்களையும் லொறியையும் கைது செய்துள்ளனர்.கைது செய்த லொறியையும் சந்தேக நபர்கள் 2 பேரையும் 26.04.2014 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.