கடந்த சில தினங்களுக்கு முன்னர், மகிந்தருக்கு ஆதரவாக பாராளுமன்றில் பெரும் ஆர்பாட்டம் நிகழ்ந்தது யாவரும் அறிந்ததே. அங்கே இரவு பகலாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நிலத்தில் தூங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந் நிலையில் அவர்களில் ஒருவரது தங்க மோதிரத்தை காணவில்லை என்று அறியப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தூங்கியவேளை அங்கே இருந்த மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் இந்த மோதிரத்தை உருவி இருக்கவேண்டும்.
வேறு எவரும் அங்கே உள்ளே செல்லவில்லை. இதனால் யார் அந்த மோதிரத்தை ஆட்டையைப் போட்டார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. மகிந்தர் மீது விசாரணை நடத்தக்கூடாது என்றுதான் , மகிந்தவுக்கு ஆதரவான பல பாராளுமன்ற உறுப்பினர்கள் நிலத்தில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மோதிரத்தை தொலைத்த நாடாளுமன்ற உறுப்பினர் அதனை எவ்வாறு வெளியே சொல்வது என்று தெரியாது திகைத்துக்கொண்டு இருந்துள்ளார். அதுபோக வெளியே சொன்னால் வெட்க்கக்கேடு என்றும் தெரியும். மேலும் இது தங்க மோதிரம் மாத்திரம் அல்ல. நவ ரத்தினங்கள் பதிக்கப்பட்டதாம். இந்த கற்களின் விலை மட்டும் சுமார் 24 லட்சம் ரூபாயை தாண்டும் என்கிறார்கள். இவர்கள் ஓசைபடாமல் பேசிக்கொண்ட விடையம் எப்படியோ ரணில் காதுகளுக்கு எட்டிவிட்டது. கடந்த சனிக்கிழமை (25) நடந்த நிகழ்வொன்றில் ரணில் உரையாற்றும் போது இதனைப் போட்டு உடைத்துவிட்டார்