GuidePedia


(காதர் முனவ்வர்)
கொலநாவை, வெள்ளம்பிட்டி பிரதேசத்தில் 40ஆயிரம் மேற்பட்ட முஸ்லீம்கள் வாழுகின்றபோதும் அங்கு முஸ்லீம்களுக்கென பாடசாலையொன்று இன்மையால் பல வறிய மாணவர்கள் பாடசாலைக்கே செல்லாமல் இருக்கின்றனர். அத்துடன் அரச பாடசாலையொன்று இன்மையால் தமது பிள்ளைகளுக்கு பாடசாலைக்கல்வியியை அளிப்பதற்கு இப்பிரதேச வாழ் பெற்றோர்கள் பாரிய இண்னல்களை எதிர்நோக்குகின்றனர். 
இம் மக்கள் கால, காலமாக பல்வேறு அரசியல்வதிகளுக்கு வாக்களிக்கின்ற போதிலும் அவர்களது பிரச்சினைகளை யாரும் கண்டு கொள்வதில்லை.
கடந்த மேல் மாகாணசபைத் தேர்தலின்போது கூட இப்பிரதேச முஸ்லீம்கள் அமைச்சர் றிசாத் பதியுத்தீனிடம் மேற்படி விடயத்தை முன்வைத்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஆட்சியின்போது குறித்த பாடசாலைக்கான காணியை பெற்றுத் தருமாறு முன்னாள் நகர அபிவிருத்தி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயாவிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் அவ்வாறு காணியை பெற்றுத்தந்தால் கட்டிடத்தை நிர்மாணிக்கக முடியுமென மேல் மாகாண முதலமைச்சர் பிரச்சன்ன ரணதுங்கவும் அமைச்சரிடம் வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அதற்கான நடவடிக்கை முன்நெடுக்கப்படாமல் இருந்தது. 
இந் நிலையில் நேற்று கல்வியமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போது அமைச்சர் றிசாத் மற்றும் ஹக்கீம் ஆகியோர் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவாசத்திடம் இவ்விடயம் பற்றி பிரஸ்தாபித்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது நகர அபிவிருத்தி அமைச்சராக ரவுப் ஹக்கீம் இந்தக் காணி எனது அமைச்சின் கீழ் வருவதனால் கல்வியமைச்சு இந்தக் காணியை பெற்றுத் தருமாறு எனக்கு கோரிக்கை விடுத்தால் அதனைத் பெற்றுத் தருவதகா உறுதியளித்தார். 
அதனைத் தொடர்ந்து கல்வியமைச்சின் செயலாளர் உத்தியோக பூ10ர்வமாக 3-5 ஏக்கர் காணியை கொலநாவை பிரதேசத்தில் பாடசாலை தேவைக்காக பெற்றுத் தருமாறு அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பும்படி கல்வியமைச்சர் செயலாளாரைப் பணித்தார். அவ்வாறு அமைச்சர் ரவுப் ஹக்கீம் காணியை ஒதுக்கித் தந்ததும் பாடசாலை கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் அங்கு வாக்குறுதி அளித்தார்.



 
Top