GuidePedia

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின், சாதனை வீரராக உருவெடுக்க அடித்தளமாக அமைந்த விடயம் பற்றி முன்னாள் இந்திய அணித்தலைவர் அஜித் வடேகர் தெரிவித்துள்ளார்.
16 வயதில் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த சச்சின், தொடக்க வீரராக களமிறங்கி யாரும் எளிதில் எட்டி விட முடியாத பல சாதனைகளை குவித்துள்ளார்.
இதற்கு அடித்தளமாக விடயம் தொடர்பாக அஜித் வடேகர் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 1994ம் ஆண்டு ஒருநாள் தொடரில் விளையாட நியூசிலாந்து சென்றிருந்தோம்.
இத்தொடரின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் தன்னால் விளையாட முடியாது என சித்து கூறினார்.
அப்போது, சச்சின்,‘ நான் தொடக்க வீரராக விளையாடலாமா’ என கேட்டார். இதற்கு அனைவரும் சம்மதித்தனர்.
இதைத் தொடர்ந்து ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த அந்த ஒருநாள் போட்டியில், சச்சின் 49 பந்துகளில் 82 ஓட்டங்கள் விளாசினார்.
இதன் மூலம் இந்திய அணி, நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதற்கு பின் தொடர்ந்து தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின், பல சாதனைகளை குவிக்க தொடங்கினார் என்று தெரிவித்துள்ளார்.



 
Top