GuidePedia

(தர்மன்)
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் தினம் - 2015 அண்மையில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
சமூக அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்துக்கான சமூகவியல் என்கிற மகுட வாசகத்துடன் இம்முறை இத்தினம் கொண்டாடப்பட்டது.
சர்வதேச பிரசித்தி வாய்ந்த பேரறிஞர்கள், பல்கலைக்கழக புத்திஜீவிகள், துறை சார்ந்த நிபுணர்கள், அரசியல் பிரமுகர்கள், பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் நாடு பூராவும் இருந்து இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
உலகப் பிரசித்தி வாய்ந்த மானிடவியலாளரும், இப்பல்கலைக்கழக சமூகவியல் பீட முன்னாள் தலைவருமான பேராசிரியர் கனானாத் ஒபேசேகர பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். 
கல்விச் செயலமர்வுகள்,  புகைப்பட மற்றும் ஆவண பட கண்காட்சிகள், கலாசார அரங்காற்றுகைகள் ஆகியனவும் சிறப்பு நிகழ்ச்சிகளாக இடம்பெற்றன.
இப்பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், விழா ஏற்பாட்டுக் குழு தலைவருமான நந்தன விஜேசிங்க விழா ஏற்பாடுகளை அற்புதமாகவும், கச்சிதமாகவும் மேற்கொண்டு இருந்தார்.









 
Top