19வது திருத்தச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை, 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படவே அதிக வாய்ப்புள்ள அதேவேளை, ஒருவேளை அது பாராளுமன்றில் தோல்வியடைந்தால் அதற்கு சதித்திட்டமே காரணமாக இருக்கும் என ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் இன்று மாலை தெரிவித்தார்,
ஜனாதிபதின் நிறைவேற்று அதிகார முறையை நீக்குதல் என்பது சரித்திர வெற்றி. அதனால் இந்த நிகழ்வு நாட்டுக்கும், மக்களுக்கும் மிக முக்கியம் வாய்ந்தது. இது தோல்வியை தழுவும் என்றால் நிச்சயம் இதற்கு சதிவேலையே காரணமாக இருக்கும். என மேலும் தெரிவித்தார்.
19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட 150 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.