GuidePedia

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி குறித்து முன்னாள் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று காலை சென்ற இவர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் காணி மோசடி தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த காணி மோசடி சம்பந்தமாக வாசுதேவ நாணயக்கார 2007 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார். எனினும் அது துரிதமாக விசாரணைக்கு எடுக்கப்படவில்லை
qq



 
Top