GuidePedia

(க.கிஷாந்தன்)
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தோட்ட வாரியாக இடம் பெறவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்ரபம் தலைமையில் 26.04.2015 அன்று அட்டனில் இடம் பெற்ற தோட்டத் தலைவர்களுக்கான கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இந்தக்கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாகாணசபை உறுப்பினர்கள் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் , அமைப்பாளர்கள் , இணைப்பாளர்கள் ,மாவட்டத்தலைவர்கள் , தோட்டக்கமிட்டித்தலைகவகள் உடபட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஐம்பதாவது வருடமான பொன்விழா நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி தலவாக்கலையில் இடம் பெறவுள்ளதால் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின நிகழ்வுகள் மே மாதம்; முதலாம் திகதி தோட்ட வாரியாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.







 
Top