GuidePedia

கைவிரம் அடையாளம் உள்ளடக்கப்பட்ட புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
இத்திட்டத்தை செயற்படுத்த ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகள் எடுக்கும்.பழைய கடவுச்சீட்டுக்களும் இரத்து செய்யப்பட மாட்டாது.
இதேவேளை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரட்டைக் பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏதாவது காரணங்களினால், குடியுரிமை பறிக்கப்பட்டவர்களுக்கு அதனை திரும்ப பெற்றுக் கொடுக்கும் செயற்பாடும் இத்திட்டத்தில் உள்ளடங்குகின்றன.
எனினும் குற்றம் புரிந்தவர்கள் இத்திட்டத்தின் மூலம் எவ்வகையிலும் நன்மை பெற முடியாது என அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.



 
Top