தம்புளை ஹபரண வீதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
பெல்வெஹர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட லொறி ஒன்றுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.