GuidePedia

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவுடனேயே நாடாளுமன்றத்தில் 19 வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
19 வது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நேற்றைய தினம் (செவ்வாய்கிழமை) நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர்,
யாப்புத் திருத்தம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
20வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி கோரிய போதும் பிரதமர் ரணில் அதில் அக்கறை செலுத்தவில்லை.
ஆனால் 19வது திருத்தம் நிறைவேறியதால் வீட்டில் சென்று உறங்கப் போவதில்லை, 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவுபட்டுள்ளதாக சிலர் கூறுகின்ற போதும் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஒன்றாக யாப்புத் திருத்தத்திற்கு வாக்களித்திருந்தோம். இதன் மூலம் எங்களுக்குள் பிளவு இல்லை என்பது தெளிவாகின்றது. எனவும் எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.



 
Top