GuidePedia

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவ தொகுதி அமைப்பாளர் விடயத்தில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை சம்பவத்தில் பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும், மேல் மாகாணசபை உறுப்பினரும் பாரத லக்ஸ்மனின் மகளுமான ஹிருணிகா பிரேமசந்திரவுக்கும் இடையில் இந்த பிரச்சினை உருவாகியுள்ளது.
தமக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கொலன்னாவ அபிவிருத்தியை கைவிடப்போவதில்லை என்று துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
பாரத லக்ஸ்மன் கொலைவழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றதன் பின்னர் அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை கொலன்னாவ தொகுதிக்காக ஜனாதிபதி தம்மை பரிந்துரைத்தால் தாம் தொகுதிக்கான பணிகளை முன்னெடுத்துச் செல்லப்போவதாக ஹிருணிகா பிரேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.



 
Top