GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசாரிக்கப்படுவதற்கு ஸ்ரீலசுகட்சி ஒரு போதும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டிசில்வா.
எனினும், முன்னாள் ஜனாதிபதி என்கிற அடிப்படையில் அதை செய்வதற்கான சம்பிரதாயம் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் அதற்குரிய வழிமுறையை முறைப்படிக் கையாண்டு இதனை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்திருப்பதோடு கடந்த திங்களன்று அனுப்பப் பட்டுள்ள கடிதம் ஆணையாளரின் அனுமதியின்றியே அனுப்பப் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தான் எதற்காக விசாரிக்கப்பட வேண்டும் எனும் மேலதிக விபரம் கோரி மஹிந்த ராஜபக்ச ல.ஊ ஆணைக்குழுவுக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top