GuidePedia

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாமல் தேசிய கொடியில் மாற்றம் செய்ய முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசியக்கொடியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமாயின் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
தேசிய கொடியை திரிபுபடுத்தி பயன்படுத்துதல் குற்றச் செயலா என்பது குறித்து அரசியல் அமைப்பில் குறிப்பிடப்படவில்லை.
எனினும் எந்தவொரு நிலைமையிலும் தேசியக்கொடியில் மாற்றங்கள் செய்வதென்றால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய கொடி திரிபுபடுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டமை குறித்து கொழும்பு ஊடகமொன்று வினவிய போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



 
Top