GuidePedia

பாகிஸ்தானில் - ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர்பக்துன்கவா மாகாணத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. காற்று பலமாக வீசியதால் ஏராளமான வீடுகளின் கூரைகள் பறந்தன.
வீடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து தரைமட்டமாயின. நூற்றுக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகள் கூண்டோடு சாய்ந்தன.
மணிக்கு 120 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. அதனால் பெஷாவர் மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மரங்கள் சாய்ந்ததால் ரோடுகளில் போக்குவரத்து தடைபட்டது.
சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 39 பேர் பலியாகினர். 214 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பெஷாவரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மின் கம்பங்கள் சாய்ந்ததால் பெஷாவர், சர்சத்தா, நவுஷெரா உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
மழைக்கு பலியானவர்கள் குடும்பங்களுக்கு கைபர் பக்துன்கவா மாநில முதல்– மந்திரி பெர்வேஷ் கட்டாக் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.



 
Top