GuidePedia

புத்தளம் – கற்பிட்டி முகத்துவாரம், சிறுகடல் பகுதியில் மீனவர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மீன்பிடியில் ஈடுபட்டதன் பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது காலை 10 மணியளவில் குறித்த மீனவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் கற்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.



 
Top