பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கல்வீச்சுத் தாக்குதலில் காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த உப பொலிஸ் பரிசோதகர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.