சிரேஷ்ட தமிழ் பத்திரிகையாளர் ஒருவரின் பணிக்கு இடையூறு விளைவித்தது மட்டுமல்லாது அவரை முறைகேடாக பேசியமை தொடர்பில் ஹட்டன் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
திருவிழா உற்சவம் ஒன்று தொடர்பாக பத்திரிகைக்கு விளம்பரம் சேகரித்தல் பணிக்கு சென்றிருந்த வேளை குறித்த வர்த்தகர், பத்திரிகையாளரை பல பேர் முன்னிலையில் அவதூறாக பேசியதோடு பணம் வாங்கிக்கொண்டு செய்தி எழுதுவதாக சத்தமிட்டுள்ளார். மேலும் குறித்த ஊடக நிறுவனத்துக்கு ஏசியதோடு, நிறுவனத்தின் அனைத்து பிரதேச நிருபர்களும் பணம் வாங்கிக்கொண்டு செய்தி எழுதுவதாகவும் அப்படி செய்தி எழுதுபவர்களுக்கு கை இல்லாது போகும் என்றும் எச்சரித்துள்ளார்.
இது குறித்து நேற்று மாலை குறித்த பத்திரிகையாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
அதில் சுயாதீனமாக செய்தி சேகரித்தல் பணிக்கு இந்த வர்த்தகர் இடையூறு விளைவித்ததாகவும் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மற்றவர் முன்னிலையில் அவதூறாக பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பத்திரிகையாளர் சட்ட ரீதியாக வர்த்தகருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாவும் தெரிவித்தார்.