GuidePedia

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை தாக்க முயற்சி செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எராஜ் பெனாண்டோ ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் ஆட்சியின் போது, ஹம்பாந்தோட்டை சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடுவந்து எராஜ் பெனாண்டோ அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
எனினும் அது  விளையாட்டுத் துப்பாக்கி என மேயர் எராஜ் பெனாண்டோ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



 
Top