GuidePedia

தனது 9 வயதுடைய தங்கையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயதுடைய சகோதரர் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது.
சிலாபம் - காக்கைப்பள்ளி, சியம்பலாகஸ்வெல பகுதியில் வசிக்கும் சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தந்தை இல்லாதபோதே தங்கை மீது வல்லுறவு புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த காலப்பகுதியிலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், தாய் நாடு திரும்பியவுடன் சிறுமி தனக்கு நேர்ந்ததை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாதம்மே பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை சிலாபம் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



 
Top