GuidePedia

தமிழ் ஊடகவியலாளரின் பணிக்கு இடையூறு விளைவித்த ஹட்டன் வர்த்தகர் ஒருவரிற்கு எதிராக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
திருவிழா உற்சவம் ஒன்று தொடர்பாக பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் பணிக்கு சென்றிருந்த வேளை மேற்படி வர்த்தகர் பத்திரிகையாளரை பல பேர் முன்னிலையில் அவதூறாக பேசியதோடு, பணம் வாங்கிக்கொண்டு செய்தி எழுதுவதாக சத்தமிட்டுள்ளார்.
மேலும் குறித்த நிறுவனத்தை ஏசியதோடு நிறுவனத்தின் அனைத்து பிரதேச நிருபர்களும் பணம் வாங்கிக்கொண்டு செய்தி எழுதுவதாகவும், அப்படி செய்தி எழுதுபவர்களுக்கு கை இல்லாது போகும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (சனிக்கிழமை) மாலை குறித்த பத்திரிகையாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். அதில் சுயாதீனமாக செய்தி சேகரிக்கும் பணிக்கு வர்த்தகர் இடையூறு விளைவித்ததாகவும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மற்றவர் முன்னிலையில் அவதூறாக பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சட்ட ரீதியாக வர்த்தகருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் குறித்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.




 
Top