GuidePedia

(க.கிஷாந்தன்)
குளிக்க சென்ற வயோதிபர் ஒருவர் குளவி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நோர்வ10ட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வ10ட் அயரபி தோட்ட பகுதியில் குளிக்க சென்றவரே இவ்வாறு தாக்குதலுக்கு இழக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் 27.04.2015 அன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மரத்திலிருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அயரபி தோட்டத்தை சேர்ந்த 79 வயதுடைய தேவசகாயம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வ10ட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




 
Top