GuidePedia

பழுலுல்லாஹ் பர்ஹான்)
மூத்த கல்விமானும், இலக்கிய ஆளுமையும் இலங்கையின் சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீலின் இழப்பு அறிவியல் மற்றும் இலக்கிய உலகிற்கு நிரப்ப முடியாத இடைவெளியை உண்டு பண்ணியுள்ளது என காத்தான்குடி ஊடக ஒன்றியம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஓன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் பொதுச் செயலாளர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ள இவ் அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ... எஸ்.எச்.எம்.ஜெமீல் முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக செயற்பட்ட காலத்தில் முஸ்லிம் சமுகத்தின் கல்வி கலாசார பண்பாட்டியலின் எழுச்சிக் மறுமலர்ச்சிக்காகவும்  பெரும் பங்காற்றிய பெருமகன்.பல நூல்களை எழுதியுள்ள அவர் இலங்கை எழுத்தாளர்களின் ஆவணத்தொகுப்பான சுவடுகளையும் தந்தவர்.
 
மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ்இலக்கிய மாநாட்டில் முக்கிய ஆய்வரங்குகளுக்கு தலைமை வகித்து நமது தேசத்தின் பெயருக்கு பெருமை சேர்த்தவர் அன்னாரின் இழப்பு பேரிழப்பாகுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அன்னனாரின் சுவன வாழ்விற்காகவும் பிரார்த்திப்பதாகவும் காத்தான்குடி ஊடக ஒன்றியம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 
Top