முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த எதிர்வரும் மே 8 ஆம் திகதி குருநாகலில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நிச்சயம் கலந்து கொள்வார் என பாராளுமன்ற உறுப்பினர் டி.பி.ஏகநாயக்க இன்று தெரிவித்தார்.
இன்று யாப்பகூவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே பாராளுமன்ற உறுப்பினர் டி.பி.ஏகநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.