GuidePedia

புலம்பெயர்ந்த தமிழர்களின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இதனை இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தவர்கள் மீதான தடை கடந்த 2014 மார்ச் மாதம் கொண்டு வரப்பட்டது.
எனினும் இதில் நாட்டுக்கு எதிராக செயற்படாதவர்களும் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்தே புதிய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் தடை நீக்கம் குறித்து அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் முழுமை அரசியலை பயன்படுத்தி இலங்கைக்கு சமாதானத்தை கொண்டு வரப்போவதாக அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முன்னைய அரசாங்கம், கடந்த பல ஆண்டுகளால் சர்வதேசத்துடன் முரண்பாட்டை கொண்டிருந்தது.
எனினும் கடந்த 108 நாட்களுக்குள் புதிய அரசாங்கம் இந்தநிலையை மாற்றியமைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.



 
Top