சம்மாந்துறை தேசிய பாடசாலையின் கணித விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களிடையே பல வருடங்களாக கருத்து முரண்பாடு நிலவி வருகிறது.இதில் கணித விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றுக் கொடுக்கும் நிசார்டீன் ஆசிரியர் சுயநலம் இன்றி மாணவர்களின் நலன்களினை மாத்திரம் கருதி செயற்பட்டு வரும் ஒருவர் என்பதனை அங்கு கல்வி கற்ற மாணவர்களிடம் கேட்கும் போது அறிந்து கொள்ளலாம்.
தற்போது நிசார்டீன் ஆசிரியரிற்கு சம்மாந்துறை தேசிய பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்படவுள்ளது உறுதியாகியுள்ளது.சம்மாந்துறை தேசிய பாடசாலை நிர்வாகம் இவ் விடயத்தில் அதிக கரிசனை கொள்ளும் இவரது இடமாற்றத்தினை தடுக்கலாம் என்ற போது அங்கு காணப்படும் சுயநல வாதிகள் சிலரிற்கு இவரது இடமாற்றம் நல்ல செய்தி என்பதால் அவரினை இப் பாடசாலையிலேயே தக்க வைப்பதில் எவரும் கரியானை கொள்ள வில்லை என்பது குறிப்பிடத் தக்கது,
இவரது இடமாற்றத்தினைத் தடுப்பதன் மூலம் சிறிதளவாவது ஒழுக்க விழுமியங்கள் உயிரோடு இருக்கும்.எனவே,இவரது இடமாற்றத்தினை தடுக்க பாடசாலை நிர்வாகம் கவனம் எடுக்க வேண்டும். யார் தான் தட்டிக் கேட்பது..?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
