GuidePedia

மலேசிய அரசு தீவிரவாத தடுப்பு சட்டம் நிறைவேற்ற விரும்பி அதற்கான மசோதாவை அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த மசோதாவின் மீது 10 மணி நேரம் காரசாரமான விவாதம் நடந்தது. அதன்பின்னர் இந்த மசோதா நேற்று அதிகாலையில் நிறைவேறியது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்யப்பட்ட இந்த சட்டம், அங்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவின்மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்தனர். ஆனால் எந்த திருத்தமும் ஏற்கப்படாமல் மசோதா நிறைவேறி விட்டது.
ஆனால் மலேசியாவில் தீவிரவாத தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குறை கூறி உள்ளனர். அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கு இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதுதான் குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.
இந்த சட்டத்தின்கீழ் தீவிரவாதி என சந்தேகிக்கப்படுகிற ஒருவரை விசாரணையின்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



 
Top