சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீது தீர்ப்பு அளிக்க 15–ந் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
அப்பீல் மனு தீர்ப்பு ஒத்திவைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது. இந்த விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உள்ளார்.

இதில் தனிக்கோட்டில் அரசு சார்பில் ஆஜரான வக்கீல் பவானி சிங்கே மேல்முறையீட்டு விசாரணையிலும் அரசு வக்கீலாக ஆஜரானார்.
அன்பழகன் மனு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரியும் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அன்பழகன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான இறுதி வாதங்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று முடிவடைந்தது.
ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன் ஏற்கனவே தனது இறுதி வாதங்களை முடித்திருந்த நிலையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.டி.துளசி தனது வாதத்தில், ‘பவானி சிங் நியமனத்தில் விதிமீறல் இல்லை’ என்று கூறினார்.
குற்றவாளிகளுடன் கூட்டு
இதனைத் தொடர்ந்து மனுதாரர் அன்பழகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அந்தியார்ஜூனா தனது வாதத்தில் ‘பவானி சிங், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு வழக்கின் திசையை மாற்ற முயற்சித்தார்’ என்று குற்றம் சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட மூத்த வக்கீல் பாலி நாரிமன், ‘தற்போது நடைபெற்று வரும் விசாரணை, பவானி சிங் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதில் உள்ள சட்டரீதியான நிலை பற்றியே தவிர அவருடைய நடத்தை குறித்த விசாரணை அல்ல’ என்று ஆட்சேபம் தெரிவித்தார்.
மூத்த வக்கீல் அந்தியார்ஜூனாவின் வாதம் முடிவடைந்த பிறகு கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.வி.ராவ் தனது வாதத்தில், ‘பவானிசிங் நியமனத்தில் கர்நாடக அரசுக்கு பங்கு ஏதுமில்லை. கர்நாடக அரசு இந்த நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்கும் நிலையில் இல்லை’ என்று தெரிவித்தார்.
திடீர் அழைப்பு
அனைவரின் வாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். அதன்படியே டி.வி. சேனல்களிலும் செய்திகள் ஒளிபரப்பாயின.
அனைவரின் வாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். அதன்படியே டி.வி. சேனல்களிலும் செய்திகள் ஒளிபரப்பாயின.
சிறிது நேரம் கழித்து அன்பழகன் தரப்பு வக்கீல்களுக்கு மதியம் 2 மணிக்கு மீண்டும் கோர்ட்டு அறைக்கு வருமாறும், சில உத்தரவுகள் வழங்கப்படலாம் என்றும் தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் மீண்டும் கோர்ட்டு அறையில் மதியம் 2 மணிக்கு குழுமினார்கள்.
இடைக்கால தடை
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் வந்த நீதிபதிகள், கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவின் மீது தீர்ப்பு வழங்குவதற்காக சுப்ரீம் கோர்ட்டு அளித்திருக்கும் தேதி என்று முடிவடைகிறது என்று கேட்டனர்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் வந்த நீதிபதிகள், கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவின் மீது தீர்ப்பு வழங்குவதற்காக சுப்ரீம் கோர்ட்டு அளித்திருக்கும் தேதி என்று முடிவடைகிறது என்று கேட்டனர்.
ஏப்ரல் 18–ந் தேதி என்று கூறியதும், அன்பழகனின் மனுவின் மீதான தீர்ப்பு வருகிற 15–ந் தேதி வழங்கப்படும் என்றும், அதுவரை மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பை கர்நாடகா ஐகோர்ட்டு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதன்படி, கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவின் மீதான இறுதி தீர்ப்பு 15–ந் தேதிக்கு பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.