மக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
திறைசேரி உண்டியல்களை அதிகரிக்கவே நாம் முயற்சித்தோம். எனினும் இறுதியில் மக்கள் மீது மேலும் சுமைகள் அதிகரித்துள்ளன.
மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவே எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.
திறைசேரி உண்டியல்கள் பெற்றுக்கொள்வதற்கான யோசனை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கதை விரட்டியடிக்க முடியாது.
இதன் மூலம் அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
சமூர்த்தி வழங்குவோம், இறப்பர், தேயிலை போன்றவற்றை கொள்வனவு செய்வோம்.
பண்டிகை முற்பணம், சம்பளங்கள் வழங்கப்படும் இவற்றில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
